சார்ஜாவில் நடைபெற்ற பிரமாண்ட பொங்கல் திருவிழா

January 20, 2023

சார்ஜாவில் பிரமாண்ட பொங்கல் திருவிழா நடைபெற்றது. கிரீன் குளோபல் மற்றும் சார்ஜா புடினா லூலூ இணைந்து நடத்திய பிரமாண்ட பொங்கல் திருவிழா, சார்ஜா புடினா லூலூ ஹைப்பர் மார்க்கெட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோலப் போட்டி, சிறுவர்களுக்கான வண்ணம் தீட்டுதல், ஓவிய போட்டி மற்றும் ஆண்கள், பெண்கள், சிறுவர்களுக்கான கலாச்சார உடை அணிவகுப்புகள் மற்றும் தமிழக பாரம்பரிய பரதம், சிலம்பம் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகள் […]

சார்ஜாவில் பிரமாண்ட பொங்கல் திருவிழா நடைபெற்றது.

கிரீன் குளோபல் மற்றும் சார்ஜா புடினா லூலூ இணைந்து நடத்திய பிரமாண்ட பொங்கல் திருவிழா, சார்ஜா புடினா லூலூ ஹைப்பர் மார்க்கெட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோலப் போட்டி, சிறுவர்களுக்கான வண்ணம் தீட்டுதல், ஓவிய போட்டி மற்றும் ஆண்கள், பெண்கள், சிறுவர்களுக்கான கலாச்சார உடை அணிவகுப்புகள் மற்றும் தமிழக பாரம்பரிய பரதம், சிலம்பம் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஈமான் கலாச்சார மையம் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், அன்வர் குரூப்ஸ் ஆப் கம்பெனி உரிமையாளர் அன்வர்தீன், Sarab engineering உரிமையாளர் முஹமது அஸ்ஹர், S Events ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் இயற்கை விவசாயம் குறித்து சிறப்புரை நிகழ்த்தினார்கள். வணக்கம் Habibi குழுவினர் சார்பாக விழிப்புணர்வு நாடகம் நடத்தினார்கள். இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu