சூரிய புயல் தாக்கியதால் வாலை இழந்த பச்சை வால் நட்சத்திரம்

January 20, 2023

சுமார் 50,000 வருடங்களுக்கு பின்னர், பச்சை வால் நட்சத்திரம் மீண்டும் பூமியை நெருங்கி வரும் நிகழ்வு நடந்து வருகிறது. இந்நிலையில், Comet C/2022 E3 (ZTF) என்ற இந்த பச்சை வால் நட்சத்திரம் சூரிய புயல் தாக்குதலுக்கு உட்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலின் பாதிப்பால், வால் நட்சத்திரத்தின் வால் பகுதி மறைந்து விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. கடந்த ஜனவரி 17ஆம் தேதி, பவேரா பகுதியில் இருந்து மைக்கேல் ஜாகர் […]

சுமார் 50,000 வருடங்களுக்கு பின்னர், பச்சை வால் நட்சத்திரம் மீண்டும் பூமியை நெருங்கி வரும் நிகழ்வு நடந்து வருகிறது. இந்நிலையில், Comet C/2022 E3 (ZTF) என்ற இந்த பச்சை வால் நட்சத்திரம் சூரிய புயல் தாக்குதலுக்கு உட்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலின் பாதிப்பால், வால் நட்சத்திரத்தின் வால் பகுதி மறைந்து விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த ஜனவரி 17ஆம் தேதி, பவேரா பகுதியில் இருந்து மைக்கேல் ஜாகர் என்ற நபர் எடுத்த புகைப்படத்தில் வால் நட்சத்திரம் தனது வால் பகுதியை இழந்துள்ளது தெரியவந்துள்ளது. அவர், 11 இன்ச் Rowe-Ackermann Schmidt Astrograph தொலைநோக்கியுடன் நிகான் Z50 கேமராவை இணைத்து இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புகைப்படத்தை அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், இந்த வால் இழப்பு எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்பது குறித்து ஆராய்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu