ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டை அஜர்பைஜான் நடத்துவதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஜார்ஜியாவில் அவர் பேரணியிலும் ஈடுபட்டார். அஜர்பைஜான் இந்த மாநாட்டை நடத்துவதற்கு தகுதியற்றதாக குற்றம் சாட்டி. கடந்த நவம்பர் 11-ஆம் தேதி, அஜர்பைஜானின் பக்கு நகரில் இந்த மாநாடு தொடங்கியது. இதில் 200 நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்கள் பங்கேற்றுள்ளனர். கிரேட்டா தன்பெர்க், அஜர்பைஜானை "அடக்குமுறை, ஆக்கிரமிப்பு அரசு" என விமர்சித்து, மனித உரிமை மீறல்களை மறைக்க இந்த மாநாடு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். அவர், "இந்த சூழலில் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க முடியாது" என கூறி, அஜர்பைஜான் அரசுக்கு எதிர்ப்பு பதிவு செய்தார்.