சீர்காழியில் மக்கள் தெரிவித்த குறைகள் உடனடியாக சரி செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதீத கனமழையால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6 மணி நேரத்தில் 44 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சீர்காழி பகுதி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
சீர்காழி பகுதியில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சீர்காழி, மயிலாடுதுறைக்கு முக்கியத்துவம் கொடுத்து மீட்பு பணி நடைபெறுகிறது. மேலும் மக்கள் தெரிவித்த குறைகள் உடனடியாக சரி செய்யப்படும் எனவும் கூறினார்.