இந்தியாவில் வரி செலுத்தும் தனிநபரின் சராசரி வருமானம், கடந்த 8 ஆண்டுகளில் 56% உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தனிநபர் சராசரி வருமானம் 4.5 லட்சம் ரூபாயில் இருந்து 7 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கையில் 90% உயர்வு காணப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, 2014 ஆம் நிதி ஆண்டில் 3.36 கோடியாக இருந்த வரி செலுத்துவோர் எண்ணிக்கை, 2022 ம் நிதி ஆண்டில் 6.37 கோடியாக உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான அடையாளம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், வருமான வரித்துறை மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால், குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் வரி செலுத்தும் செயல்பாடுகள் எளிமையாக்கப்பட்டு, இந்த நிலை எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.