கடும் நிதிச் சுமையில் சிக்கியுள்ள கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம், திவால் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கௌஷிக் கோனா தனது பதவியிலிருந்து விலகி உள்ளார்.
கடந்த 7 மாதங்களுக்கு முன்பு, கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் திவால் நடவடிக்கைகளை தொடங்கியது. இந்த நிலையில், நேற்று நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவி விலகியுள்ளார். அவரது பதவி விலகல் உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார். நிறுவனத்தில் இதுவரை ஆற்றிய பணிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.