குரூப்-4 முடிவு மார்ச் மாதம் வெளியாகும்: டிஎன்பிஎஸ்சி

February 15, 2023

குரூப்-4 தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 9,870 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு கடந்த ஜூலை மாதம் 24-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 18 லட்சத்து 36,535 பேர் தேர்வெழுதினர். பின்னர், அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் […]

குரூப்-4 தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) விளக்கம் அளித்துள்ளது.

தமிழக அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 9,870 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு கடந்த ஜூலை மாதம் 24-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 18 லட்சத்து 36,535 பேர் தேர்வெழுதினர். பின்னர், அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர காலஅட்டவணையில் பிப்ரவரி 2-வது வாரம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால், தேர்வு முடிந்து சுமார் 7 மாதங்களாகியும், இதுவரை முடிவுகள் வெளியாகவில்லை.

இதனால் வேலைவாய்ப்பு மற்றும் அடுத்தகட்டத் தேர்வுகளுக்குத் திட்டமிட்டிருந்த தேர்வர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, குரூப்-4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி விரைவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இந்நிலையில், குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu