இந்தியாவில் பல்வேறு பங்குச்சந்தை தரவு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் குரோ, ஜீரோதா ஆகிய நிறுவனங்கள் மிகவும் பிரபலமானதாகும். அதில், ஜீரோதா நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய பங்குச் சந்தை தரகு நிறுவனமாக இருந்து வந்தது. தற்போது, குரோ நிறுவனம் ஜிரோதாவை பின்னுக்கு தள்ளி, முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த தளத்தில் தற்போது 6.6 மில்லியன் பயனர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முந்தைய மாதத்தில் 6.2 மில்லியன் அளவில் இருந்த குரோ பயனர் எண்ணிக்கை, செப்டம்பர் மாத இறுதியில் 6.62 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது. அதே சமயத்தில், ஜீரோதா நிறுவனத்தின் பயனர் எண்ணிக்கை 6.4 மில்லியன் அளவில் உள்ளது. அதன்படி, குரோ நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. அப்ஸ்டாக்ஸ் போன்ற நிறுவனங்களும் கணிசமான உயர்வை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.குரோ நிறுவனம் இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.














