பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பு நிறுவனமான GSK, முடக்கு வாத நோய்கான ம௫ந்தை தயாரித்து ஒப்புதல் பெறுவதற்காக சோதனை செய்தது. ஆனால் அந்த ம௫ந்து பயனளிக்கவில்லை. எனவே நிறுவனம் பரிசோதனை சிகிச்சையின் ஒழுங்குமுறை ஆவணங்களை சமர்ப்பிக்க வி௫ம்பவில்லை என்று கூறப்படுகிறது.
அதாவது GSK நிறுவனம் தனது ஆய்வில் ஓடிலிமாப் எனப்படும் ஆன்டிபாடி-அடிப்படையிலான மருந்தைக் சோதனை செய்தது. ஆனால் இந்த ம௫ந்து முடக்குவாத நோயாளிகளுக்கு மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் மென்மை தன்மையை மேம்படுத்துவதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. எனவே நிறுவனமானது ஓடிலிமாப் ம௫ந்திற்கு ஒப்புதல் பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அறிக்கை கூறுகிறது.