இந்தியாவின் டிசம்பர் மாத ஜிஎஸ்டி வரி வசூல் 1.64 லட்சம் கோடி

January 2, 2024

கடந்த டிசம்பர் மாதத்தில், இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வரி வசூல் 1.64 லட்சம் கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் மாதாந்திர ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த டிசம்பர் மாதத்தில் 10% உயர்வை பதிவு செய்துள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில் இதுவரை வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வருவாய், கடந்த ஆண்டை விட 12% உயர்ந்து 14.97 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, டிசம்பர் மாத மொத்த ஜிஎஸ்டி வருவாய் 164882 கோடி […]

கடந்த டிசம்பர் மாதத்தில், இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வரி வசூல் 1.64 லட்சம் கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் மாதாந்திர ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த டிசம்பர் மாதத்தில் 10% உயர்வை பதிவு செய்துள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில் இதுவரை வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வருவாய், கடந்த ஆண்டை விட 12% உயர்ந்து 14.97 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, டிசம்பர் மாத மொத்த ஜிஎஸ்டி வருவாய் 164882 கோடி ரூபாயாகும். இதில், மத்திய ஜிஎஸ்டி 30443 கோடி அளவிலும், மாநில ஜிஎஸ்டி 37935 கோடி அளவிலும் உள்ளது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி 84255 கோடி ரூபாயாகவும், செஸ் வரி 12249 கோடி ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu