அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வசூல் 1.72 லட்சம் கோடி

November 3, 2023

கடந்த அக்டோபர் மாதத்தில், இந்தியாவின் ஜிஎஸ்டி வரி வசூல் 1.72 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. இது, இதுவரை பதிவு செய்யப்பட்ட ஜிஎஸ்டி வரி வசூலில் இரண்டாவது பெரிய தொகையாகும். முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதத்தில், 1.87 லட்சம் கோடி அளவில் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டதே அதிகபட்ச வசூல் தொகை ஆகும்.கடந்த அக்டோபர் மாதத்தில், மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் 172003 கோடி ஆகும். அதில் மத்திய ஜிஎஸ்டி 30062 கோடி, மாநில ஜிஎஸ்டி 38171 கோடி, […]

கடந்த அக்டோபர் மாதத்தில், இந்தியாவின் ஜிஎஸ்டி வரி வசூல் 1.72 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. இது, இதுவரை பதிவு செய்யப்பட்ட ஜிஎஸ்டி வரி வசூலில் இரண்டாவது பெரிய தொகையாகும். முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதத்தில், 1.87 லட்சம் கோடி அளவில் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டதே அதிகபட்ச வசூல் தொகை ஆகும்.கடந்த அக்டோபர் மாதத்தில், மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் 172003 கோடி ஆகும். அதில் மத்திய ஜிஎஸ்டி 30062 கோடி, மாநில ஜிஎஸ்டி 38171 கோடி, ஐஜிஎஸ்டி 91315 கோடி மற்றும் செஸ் வரி 12456 கோடி ஆகும். மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும், கடந்த 2022 அக்டோபர் மாதத்தை விட இந்த அக்டோபரில் 13% ஜிஎஸ்டி வரி வசூல் உயர்ந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu