ஜனவரி மாத ஜிஎஸ்டி வருவாய் 1.55 லட்சம் கோடி

February 2, 2023

இந்தியாவின் ஜனவரி மாத ஜிஎஸ்டி வருவாய் 1.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக வசூலானதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில் இதுவரை வசூலான அதிகபட்ச மாதாந்திர ஜிஎஸ்டி வரியில், இது 2ம் இடத்தை பிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன், மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய், 3வது முறையாக 1.5 லட்சம் கோடியை தாண்டி உள்ளதாக தெரிவித்துள்ளது. நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஜனவரி மாதத்தில் மொத்தம் 155922 கோடி மதிப்பில் சரக்கு மற்றும் சேவை வரி […]

இந்தியாவின் ஜனவரி மாத ஜிஎஸ்டி வருவாய் 1.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக வசூலானதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில் இதுவரை வசூலான அதிகபட்ச மாதாந்திர ஜிஎஸ்டி வரியில், இது 2ம் இடத்தை பிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன், மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய், 3வது முறையாக 1.5 லட்சம் கோடியை தாண்டி உள்ளதாக தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஜனவரி மாதத்தில் மொத்தம் 155922 கோடி மதிப்பில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ஆகியுள்ளது. இதில், மத்திய ஜிஎஸ்டி வரியாக 28963 கோடியும், மாநில ஜிஎஸ்டி வரியாக 36730 கோடியும் வசூலாகி உள்ளது. மேலும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக 79599 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், செஸ் வரி 10630 கோடியாக பதிவாகியுள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வருவாய், முந்தைய நிதியாண்டில் வசூலான ஜிஎஸ்டி வருவாயை விட 24% கூடுதலாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu