100 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் - 7 நாட்களுக்குள் இ - இன்வாய்ஸ்களை பதிவேற்றும் முறை

April 15, 2023

ஒரு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு அதிகமாக வருவாய் ஈட்டும் நிறுவனங்கள், தங்கள் ரசீதுகளை 7 நாட்களுக்குள் இன்வாய்ஸ் பதிவு தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஜிஎஸ்டி அமைப்பு தெரிவித்துள்ளது. வரும் மே ஒன்றாம் தேதி முதல், இந்த செயல்முறை அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, வரி சலுகைகள் பெறுவதற்கு, நிறுவனங்கள் இன்வாய்ஸ்களை பதிவேற்றம் செய்கின்றன. தற்போதைய நிலையில், இவை உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை. இந்நிலையில், இன்வாய்ஸ்களை பதிவேற்றம் செய்வதற்கான காலக்கெடுவைக் கொண்டு வரும் நோக்கில், இந்த […]

ஒரு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு அதிகமாக வருவாய் ஈட்டும் நிறுவனங்கள், தங்கள் ரசீதுகளை 7 நாட்களுக்குள் இன்வாய்ஸ் பதிவு தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஜிஎஸ்டி அமைப்பு தெரிவித்துள்ளது. வரும் மே ஒன்றாம் தேதி முதல், இந்த செயல்முறை அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, வரி சலுகைகள் பெறுவதற்கு, நிறுவனங்கள் இன்வாய்ஸ்களை பதிவேற்றம் செய்கின்றன. தற்போதைய நிலையில், இவை உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை. இந்நிலையில், இன்வாய்ஸ்களை பதிவேற்றம் செய்வதற்கான காலக்கெடுவைக் கொண்டு வரும் நோக்கில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, 7 நாட்களுக்கு உட்பட்ட தேதிகளில் இருக்கும் இன்வாய்ஸ்களை மட்டுமே தளத்தில் பதிவேற்றம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது 100 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் நிறுவனங்களுக்கு மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் நிறுவனங்கள், எப்போதும் போல இன்வாய்ஸ்களை உருவாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu