இந்தியாவில், கடந்த சில மாதங்களாக, சராசரி ஜிஎஸ்டி வரி வசூல் 1.5 கோடி என்ற அளவில் பதிவாகி வருகிறது. அதே வேளையில், பல்வேறு வரி ஏய்ப்பு சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், கடந்த 2 வருடங்களில், சுமார் 55575 கோடி ரூபாய் அளவில், ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜிஎஸ்டி துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இதுவரை 719 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 22300 போலி ஜிஎஸ்டி ஐடிக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை, சிபிஐ துறை, வருமானவரித்துறை ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து, இந்த தகவல்களை திரட்டி உள்ளதாக ஜி எஸ் டி ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வரி ஏய்ப்புகளால், அரசாங்கத்திற்கு பெரும் அளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.