ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ். டி கவுன்சிலின் 53வது கூட்டம் இன்று டெல்லியில் மத்திய நீதிமன்றம் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளார். அதில் எஃகு, அலுமினியம், இரும்பு உள்ளிட்ட பால் கேன்களுக்கு, அட்டை பெட்டிகளுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். மேலும் மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு நிபந்தனை உடன் கூடிய விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோன்று ரயில் நிலையங்களில் பயணிகள் ஓய்வெடுக்கும் அறை, பொருள்கள் வைக்கும் அறை, பயணிகள் பயன்படுத்தும் மின்சார வாகனங்களுக்கான சேவை, ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட்டுக்கு ஜிஎஸ்டி வரி ஆகியவை விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்