இந்தியாவின் டிசம்பர் மாத ஜிஎஸ்டி வரி வசூல் 149507 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. மேலும், வழக்கமான தீர்வுகளுக்கு பின்னர், மத்திய மற்றும் மாநில அரசுகளின் மொத்த ஜிஎஸ்டி வரி வருவாய் 63380 கோடி மற்றும் 64451 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது.
டிசம்பர் மாதம் வசூலிக்கப்பட்டுள்ள மொத்த ஜிஎஸ்டி வருவாயில் மத்திய ஜிஎஸ்டி 26711 கோடி ரூபாயாகவும் மாநில ஜிஎஸ்டி 33357 கோடியாகவும் உள்ளது. கடந்த வருட டிசம்பர் மாத ஜிஎஸ்டி வரி வசூலுடன் ஒப்பிடுகையில் இது 15% உயர்வாகும். அத்துடன், தொடர்ந்து 11 மாதங்களாக இந்தியாவின் ஜிஎஸ்டி வரி வசூல், 1.4 லட்சம் கோடியை கடந்து பதிவாகியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, டிசம்பர் மாதத்தில் 8324 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரியாக வசூல் ஆகியுள்ளது. இது முந்தைய ஆண்டின் டிசம்பர் மாத வரி வசூலை விட 25% உயர்வாகும். மத்திய நிதி அமைச்சகம் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது.














