இந்தாண்டு ஜனவரியில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.96 லட்சம் கோடியாக இருந்ததாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தை ஒப்பிடுகையில், இது 12.3% அதிகரித்துள்ளது. இதில், உள்ளூர் விற்பனையில் இருந்து ரூ. 1.47 லட்சம் கோடி, இறக்குமதி பொருள்களிலிருந்து ரூ. 48,382 கோடி வசூலாகியுள்ளது. இது முறையே 10.4% மற்றும் 19.8% அதிகரிப்பைக் காட்டுகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் வசூலான ரூ. 1.77 லட்சம் கோடியை விடவும் இந்த உயர்வு சிறப்பாக இருக்கிறது.
தமிழகம், மகாராஷ்டிரம், குஜராத், தெலங்கானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஜிஎஸ்டி வருவாய் 10% முதல் 20% வரை உயர்ந்துள்ளது. அதேசமயம், கர்நாடகம், ஹரியாணா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் 5% முதல் 9% வரை வருவாய் அதிகரித்துள்ளது.