குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேச சட்டமன்ற தேர்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிப்பு: தேர்தல் ஆணையம் தகவல்

October 14, 2022

குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேச சட்டமன்ற தேர்தல் தேதிகளை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேச சட்டமன்ற தேர்தலை டிசம்பருக்குள் முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை பார்வையிட சில நாட்களுக்கு முன்பு 3 நாள் பயணமாக இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் சென்றிருந்தனர். மேலும் அம்மாநில தேர்தல் அதிகாரிகளுடன், இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் இந்த தேர்தல் தேதியானது […]

குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேச சட்டமன்ற தேர்தல் தேதிகளை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.

குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேச சட்டமன்ற தேர்தலை டிசம்பருக்குள் முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை பார்வையிட சில நாட்களுக்கு முன்பு 3 நாள் பயணமாக இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் சென்றிருந்தனர். மேலும் அம்மாநில தேர்தல் அதிகாரிகளுடன், இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

அதன் பின்னர் இந்த தேர்தல் தேதியானது அறிவிக்கப்படவுள்ளது. இந்த சூழலில் ஏற்கனவே முக்கிய அரசியல் கட்சிகளான பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இந்த 2 மாநிலங்களிலும் வரும் டிசம்பர் மாதத்துடன் சட்டமன்ற பதவிகளுக்கான 5 ஆண்டுகள் முடிவடைகிறது. அதனால் நவம்பர் மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu