குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 1,621 வேட்பாளர்கள் உள்ளனர். அதில் 139 பெண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
குஜராத்தில் மொத்தம் உள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணைய புள்ளி விவரங்களின்படி 1,621 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 139 பேர் மட்டுமே பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
குஜராத் வாக்காளர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள் உள்ள நிலையில், வேட்பாளர்களில் பெண்களின் பங்கு 8.57% ஆக உள்ளது. கடந்த 2017 தேர்தலில் போட்டியிட்ட 1,828 வேட்பாளர்களில் பெண்களின் பங்கு 126 ஆக இருந்தது. இதில் பாஜகவின் 9, காங்கிரஸின் 4 பேர் என 13 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.