குஜராத் தேர்தல் தேதியை இந்த வாரம் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத், இமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் ஒரே நேரத்தில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த 14ம் தேதி இமாச்சல் பிரதேசத்துக்கு மட்டும் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார். குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை.
இமாச்சலில் நவம்பர் 12ல் தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கடந்த 2017ம் ஆண்டிலும் குஜராத் சட்டப்பேரவைக்கு தனியாகதான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதே நடைமுறை தற்போதும் பின்பற்றப்படுவதாக, குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்காததற்கான காரணமாக தேர்தல் ஆணையம் கூறியது. இந்நிலையில், குஜராத்துக்கான தேர்தல் தேதியை இந்த வாரம் அறிவிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.