குஜராத்தில் கிலோ ரூ.72-க்கு பசுஞ்சாண எரிபொருள்

March 12, 2024

குஜராத்தில் பசு சாணம் கொண்டு தயாரிக்கப்பட்ட இயற்கை எரிவாயு விற்கும் முதல் பங்க் தொடங்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள திசா சாரத் என்னும் நெடுஞ்சாலையில் பசுவின் சாணம் கொண்டு தயாரிக்கப்பட்ட இயற்கை எரிவாயு விற்கும் இந்தியாவின் முதல் பங்க் தொடங்கப்பட்டுள்ளது. பனஸ்கந்தா மாவட்டத்தில் பால் சங்கத்தின் கீழ் நான்கு ஏக்கர் பரப்பளவில் பசுமை வாயு தொழிற்சாலை உள்ளது. இதில் நாள்தோறும் 40 ஆயிரம் கிலோ அளவிலான பசு சாணத்திலிருந்து 550 முதல் 600 கிலோ […]

குஜராத்தில் பசு சாணம் கொண்டு தயாரிக்கப்பட்ட இயற்கை எரிவாயு விற்கும் முதல் பங்க் தொடங்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள திசா சாரத் என்னும் நெடுஞ்சாலையில் பசுவின் சாணம் கொண்டு தயாரிக்கப்பட்ட இயற்கை எரிவாயு விற்கும் இந்தியாவின் முதல் பங்க் தொடங்கப்பட்டுள்ளது.
பனஸ்கந்தா மாவட்டத்தில் பால் சங்கத்தின் கீழ் நான்கு ஏக்கர் பரப்பளவில் பசுமை வாயு தொழிற்சாலை உள்ளது. இதில் நாள்தோறும் 40 ஆயிரம் கிலோ அளவிலான பசு சாணத்திலிருந்து 550 முதல் 600 கிலோ வரையிலான இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது. இது திசா சாரத் நெடுஞ்சாலையில் உள்ள 3000 கியூபிக் மீட்டர் சுற்றளவு உள்ள எரிவாயு நிலையத்தில் தேக்கி வைக்கப்படுகிறது. இதுவே இந்தியாவின் முதல் இயற்கை எரிவாயு பங்க் ஆகும்.

இங்கு 2800 பசுக்களின் சாணம் தினந்தோறும் கொள்முதல் செய்யப்படுகிறது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பெறப்பட்டு அவ்வாறு சேகரிக்கப்படும் சாணத்தில் இருந்து எரிவாயு தயாரிக்கப்படுகிறது. ஒரு கிலோ பசுஞ்சாண எரிவாயு 72 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு இங்கு 10 லட்சம் கிலோ கொள்ளளவு கொண்ட டேங்க் நிறுவ பால் உற்பத்தியாளர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu