குஜராத்- ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
குஜராத்தில் 182 தொகுதிகள் உள்ள சட்டசபைக்கு, கடந்த 1 மற்றும் 5ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில், 64.33 சதவீத ஓட்டுகள் பதிவாகின. கடந்த 2017 தேர்தலில் பா.ஜ., 99 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது. கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் ஆட்சியில் உள்ள பா.ஜ. இந்த சாதனையை சமன் செய்ய தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது.
பாஜக பெரும்பான்மைக்கு தேவையான 92 தொகுதிகளைவிட அதிக தொகுதிகளில் வெல்லும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மாநிலம் முழுதும், 37 மையங்களில் காலை 8:௦௦ மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.