குகேஷ் மற்றும் டிங் லிரென் இடையிலான உலக செஸ் போட்டியில் லிரென் வெற்றி பெற்றார்.
இந்தியாவின் குகேஷ் மற்றும் நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நேற்று தொடங்கியது.14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முதல் சுற்றில் சென்னையைச் சேர்ந்த குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். இந்த சுற்றில், லிரெனின் கை ஆரம்பத்திலேயே ஓங்கியது, மேலும் 42-வது நகர்த்தலில் குகேஷ் தோல்வியை ஒப்புக் கொண்டார். இதனால், லிரென் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளார். இன்று 2.30 மணிக்கு 2வது சுற்றில் குகேஷ் கருப்பு காயுடன் விளையாடுவார்.