தமிழகத்தை சேர்ந்த குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார் 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழக வீரர் குகேஷ், கடைசி சுற்றில் சீனாவின் டிங் லிரெனை எதிர்த்து வெற்றி பெற்றார். இந்த வெற்றியுடன், குகேஷ் உலகின் இளம் செஸ் சாம்பியன் ஆனார். சர்வதேச செஸ் கூட்டமைப்பு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்த வெற்றிக்கு மொத்த பரிசுத் தொகை 2.5 மில்லியன் டாலர்கள் (ரூ. 20 கோடி) என கூறப்படுகிறது. இந்த தொகை 2 […]

தமிழகத்தை சேர்ந்த குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார்

18 வயதிலேயே உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழக வீரர் குகேஷ், கடைசி சுற்றில் சீனாவின் டிங் லிரெனை எதிர்த்து வெற்றி பெற்றார். இந்த வெற்றியுடன், குகேஷ் உலகின் இளம் செஸ் சாம்பியன் ஆனார். சர்வதேச செஸ் கூட்டமைப்பு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்த வெற்றிக்கு மொத்த பரிசுத் தொகை 2.5 மில்லியன் டாலர்கள் (ரூ. 20 கோடி) என கூறப்படுகிறது. இந்த தொகை 2 லட்சம் டாலர்கள் (ரூ. 1.68 கோடி) வெற்றி பெற்ற ஒவ்வொரு போட்டிக்கான பரிசாக வழங்கப்படுகிறது. குகேஷ், 3 போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் ரூ. 5 கோடியே 4 லட்சம் பெறுவார். மீதம் உள்ள தொகை, குகேஷ் மற்றும் டிங் இடையே பகிரப்படும், இதில் குகேஷ் 1.35 மில்லியன் டாலர்கள் (ரூ. 11 கோடி) பெறுவார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu