ஈரான் மீதான தாக்குதலுக்கு ஆதரவு கிடையாது - வளைகுடா நாடுகள்

October 5, 2024

ஈரான் மீதான தாக்குதலுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என வளைகுடா நாடுகளின் தலைவர்கள் தெரிவித்தனர். ஈரானை தாக்குவதற்கான உதவி, அதன் அண்டை நாடுகளான சௌதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றிடமிருந்து பெற வேண்டும். இந்நிலையில், கத்தார் தலைநகரான தோஹாவில் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட நாடுகளின் அமைச்சர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஈரான் நாட்டின் அமைச்சர்களும் இதில் கலந்து கொண்டனர். மேலும், போரில் நடுநிலை வகிக்கப் போவதாக கூறியுள்ளனர். தங்கள் […]

ஈரான் மீதான தாக்குதலுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என வளைகுடா நாடுகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.

ஈரானை தாக்குவதற்கான உதவி, அதன் அண்டை நாடுகளான சௌதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றிடமிருந்து பெற வேண்டும். இந்நிலையில், கத்தார் தலைநகரான தோஹாவில் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட நாடுகளின் அமைச்சர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஈரான் நாட்டின் அமைச்சர்களும் இதில் கலந்து கொண்டனர். மேலும், போரில் நடுநிலை வகிக்கப் போவதாக கூறியுள்ளனர். தங்கள் நாட்டின் நிலப்பரப்பிலும், வான்வழித் தடத்திலும் ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், ஈரான்-இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமாகும் போது, வளைகுடா நாடுகளின் எண்ணெய் ஆலைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் விவாதித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu