காலநிலை மாற்றத்தின் விளைவுகள் உலகின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டு வருகின்றன. குறிப்பாக, துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. எனவே, கடல்களுக்கு அடியில் உள்ள நீரோட்டங்கள் வெகுவாக பாதிப்படைந்துள்ளன. விளைவாக, வரும் 2025 ஆம் ஆண்டு, சிறிய அளவிலான ஐஸ் ஏஜ் விளைவை உலகம் பார்க்கக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
வடக்கு அட்லாண்டிக் பகுதியில், கடலுக்கு அடியில் உள்ள கல்ஃப் ஸ்ட்ரீம் எனப்படும் நீரோட்டம் மிகவும் முக்கியமானது. மெக்சிகோவில் ஆரம்பித்து வெகு தொலைவுக்கு இது நீள்கிறது. குறிப்பாக, மேற்கு ஐரோப்பாவின் காலநிலையை நிர்மாணிப்பதில் இது பெரும் பங்கு வகிக்கிறது. இந்த நிலையில், துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதால், இந்த நீரோட்டம் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இதனால், உலக அளவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.