அமெரிக்காவில் சூப்பர் பவுல் எனப்படும் ரக்பி விளையாட்டு மிகவும் பிரபலம். இந்த விளையாட்டின் வெற்றி பேரணி நேற்று நிகழ்ந்து கொண்டிருந்த போது, திடீரென துப்பாக்கிச் சூடு ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள கன்சாஸ் நகரில் உள்ளூர் அணிகளுக்கு இடையிலான சூப்பர் பவுல் எனப்படும் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. போட்டியை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். இறுதியில், போட்டியின் வெற்றி பேரணி நடந்த போது, அடையாளம் தெரியாத நபர்களால் கலவரம் ஏற்பட்டது. அந்த சமயத்தில், துப்பாக்கிச் சூடு நடந்ததில், சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், 9 குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளனர்.