அமெரிக்காவில் உள்ள மெய்னி மாகாணத்தில், நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளார். வணிக வளாகம் மற்றும் பார் ஆகிய இரு வேறு இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில், மொத்தமாக 22 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், இந்த சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர் மாயமாகியுள்ளார். அவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், துப்பாக்கிச் சூடு நடந்த மாகாணத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.