ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கி சண்டை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்திலுள்ள குரும்ஹீரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கின்றனர் என்ற ரகசிய தகவலை அடிப்படையாக கொண்டு பாதுகாப்புப் படையினர் இன்று காலை அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது, பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.அதனை தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் 2 முதல் 3 தீவிரவாதிகள் பிடிபட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் […]

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்திலுள்ள குரும்ஹீரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கின்றனர் என்ற ரகசிய தகவலை அடிப்படையாக கொண்டு பாதுகாப்புப் படையினர் இன்று காலை அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அப்போது, பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.அதனை தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் 2 முதல் 3 தீவிரவாதிகள் பிடிபட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பாதுகாப்புப் படையினர் பல்வேறு ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu