நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் பொதுமக்கள் 100 பேர் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவின் வடக்கு பகுதியில் செயல்பட்டு வரும் ஆயுதக் குழுக்கள், குழந்தைகள், பெண்கள் உட்பட சாமானிய மக்களை அதிகமாக கடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன் கதுனா மாநிலத்தில் 300 மாணவர்கள் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நேற்று முன்தினம், ஜூரு கவுன்சில் பகுதியில் கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கிருந்த டோகன் நோமா பழங்குடியின மக்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த சமூகத்தை சேர்ந்த 14 பேர் கடத்தி செல்லப்பட்டுள்ளனர். அதை தொடர்ந்து, கஜுரு ஸ்டேசன் சமுதாயத்தை சேர்ந்த 87 பேர் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.