பாகிஸ்தானில் பள்ளி வேன் மீது துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததில் இரண்டு குழந்தைகள் பலியாகி உள்ளனர்.
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் லாகூரில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேரி கோட் பகுதியில் பள்ளி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அடையாளம் தெரியாத ஒரு கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த தாக்குதலில் ஐந்து முதல் பத்து வயதுக்கு உட்பட்ட ஏழு குழந்தைகளும், வேன் ஓட்டுனரும் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்பொழுது சிகிச்சை பலனின்றி 2 குழந்தைகள் பலியாகினர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நிகழ்த்தியவர்களை சிசிடிவி கேமரா மூலம் கைது செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் செபாஷ் ஷெரீப் மற்றும் குடியரசுத் தலைவர் அலி சர்தாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.














