இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குர்தீப் ரந்தவா, ஜெர்மனியின் துருங்கியா மாகாணத்தின் தலைமை பொறுப்பில் கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் கட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெர்மனி நாட்டில், இந்தியர் ஒருவர் அரசு தலைமை பொறுப்பில் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் கட்சியில். பல ஆண்டுகளாக குர்தீப் ரந்தவா உறுப்பினராக உள்ளார். ஜெர்மனியில், கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்தலில், முதல் இந்தியப் பிரதிநிதியாக குர்தீப் ரந்தவா தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மனி வாழ் இந்தியர்களை, அரசியலில் ஆர்வத்துடன் பங்கேற்க வைக்க, அவர் நடவடிக்கைகள் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியா - ஜெர்மனி இடையிலான வர்த்தகப் பிணைப்பு மற்றும் மனிதாபிமான சேவைகள் இவரது காலத்தில் வலுவடையும் என கருதப்படுகிறது. இதுகுறித்து ஜெர்மனியில் உள்ள இந்தியத் தூதரகம் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.