குருவாயூர்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் மாற்று பாதையில் இயக்கம்

February 22, 2024

தெற்கு ரயில்வே குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. பிப்ரவரி 22, 25 மற்றும் 27 ஆம் தேதி தாம்பரத்திலிருந்து செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மாற்று பாதையாக விருதுநகர், ராஜபாளையம் மற்றும் தென்காசி வழியாக செங்கோட்டை சென்றடைகிறது. மறுமார்க்கமாக செங்கோட்டையிலிருந்து நாளை 26 மற்றும் 28ஆம் தேதி தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் தென்காசி, ராஜபாளையம், மற்றும் விருதுநகர் வழியாக தாம்பரம் வந்தடையும். அதேபோன்று சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை இரவு […]

தெற்கு ரயில்வே குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

பிப்ரவரி 22, 25 மற்றும் 27 ஆம் தேதி தாம்பரத்திலிருந்து செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மாற்று பாதையாக விருதுநகர், ராஜபாளையம் மற்றும் தென்காசி வழியாக செங்கோட்டை சென்றடைகிறது. மறுமார்க்கமாக செங்கோட்டையிலிருந்து நாளை 26 மற்றும் 28ஆம் தேதி தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் தென்காசி, ராஜபாளையம், மற்றும் விருதுநகர் வழியாக தாம்பரம் வந்தடையும். அதேபோன்று சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை இரவு நாகர்கோவில் செல்லும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் மாற்று பாதையாக சேலம்,ஈரோடு, திருச்சி, கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவில் சென்றடையும். மறு மார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து 25ஆம் தேதி இரவு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் மாற்று பாதையாக திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூர், ஈரோடு, மற்றும் சேலம் வழியாக சென்னை சென்ட்ரல் வந்தடையும். இதேபோன்று குருவாயூரிலிருந்து 27ஆம் தேதி சென்னை எழும்பூர் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலும், மேற்கு வங்காளம் கவுராவில் இருந்து புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலும் மாற்றப் பாதை ஆக சென்றடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu