எச் 1 பி விசா அனுமதிகளில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்வதாக அமெரிக்கா கண்டறிந்துள்ளது. அதனை களையும் நோக்கில், விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி, வரும் மார்ச் 6ஆம் தேதி முதல் எச் 1 பி விசா முன்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 22 ஆம் தேதி வரை முன்பதிவு விண்ணப்ப காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹெச் 1 பி விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டுவோர் USCIS தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த முறை, ஒவ்வொரு பாத்தியதாரரின் (Beneficiary) தனிநபர் விவரங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். அத்துடன், ஒவ்வொரு பாத்தியதாரருக்கும் பாஸ்போர்ட் மற்றும் பயண ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடான விண்ணப்பங்களை நீக்கும் அதிகாரம் முழுமையாக USCIS வசம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.