அமெரிக்காவில் இருக்கும் போதே எச்1பி விசா புதுப்பிப்பு - அறிவிப்பு

February 10, 2023

குறிப்பிட்ட சில எச்1பி மற்றும் எல்1 விசாக்களை, அமெரிக்காவில் இருந்தபடியே புதுப்பிக்கும் நடைமுறையை கொண்டு வர திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், நிகழாண்டில் இந்த திட்டத்தை பரிசோதனை முறையில் செயல்படுத்தவும், வரும் ஆண்டுகளில் அதனை முழுமையாக செயல்படுத்தவும் திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு வரை, எச்1பி விசாக்களை அமெரிக்காவில் இருந்தபடியே புதுப்பித்துக் கொள்ள முடியும். அதன்பின்னர், எச்1பி விசாதாரர்கள், சொந்த நாட்டுக்கு திரும்பி, விசா காலத்தை நீட்டித்துக் கொள்வதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள […]

குறிப்பிட்ட சில எச்1பி மற்றும் எல்1 விசாக்களை, அமெரிக்காவில் இருந்தபடியே புதுப்பிக்கும் நடைமுறையை கொண்டு வர திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், நிகழாண்டில் இந்த திட்டத்தை பரிசோதனை முறையில் செயல்படுத்தவும், வரும் ஆண்டுகளில் அதனை முழுமையாக செயல்படுத்தவும் திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு வரை, எச்1பி விசாக்களை அமெரிக்காவில் இருந்தபடியே புதுப்பித்துக் கொள்ள முடியும். அதன்பின்னர், எச்1பி விசாதாரர்கள், சொந்த நாட்டுக்கு திரும்பி, விசா காலத்தை நீட்டித்துக் கொள்வதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டிய விதிமுறை பின்பற்றப்பட்டது. குறிப்பாக, விசா நீட்டிப்பு தேதியை தங்கள் பாஸ்போர்ட்டில் அச்சு பெற்று வாங்க வேண்டும். அப்பொழுதுதான் அமெரிக்காவிலிருந்து வெளியேறவும் / உள்நுழையவும் முடியும். அந்தந்த நாட்டில் இருக்கும் அமெரிக்க தூதரகங்களில் பாஸ்போர்ட்டில் அச்சடிக்கும் முறை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனால், விசாதாரர்கள், விசா புதுப்பிப்புக்காக பல ஆண்டுகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலை தீர்க்க, 2004 ஆம் ஆண்டுக்கு முந்தைய நடைமுறையை மீண்டும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், விசா நடைமுறைகளை எளிமையாக்கும் வகையில், இந்த நடைமுறையை கொண்டு வர உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu