ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி பதவி விலகல் - இடைக்கால பிரதமர் நியமனம்

ஹைதி நாட்டின் பிரதமர் ஏரியல் ஹென்றி தனது பதவியிலிருந்து விலகி உள்ளார். அவரை தொடர்ந்து இடைக்கால பிரதமராக அந்நாட்டின் நிதி மற்றும் பொருளாதாரத் துறை அமைச்சர் மைக்கேல் பேட்ரிக் போயிஸ்வேர்ட் நியமிக்கப்பட்டுள்ளார். ஹைதி நாட்டில் ஆயுதக் குழுவினர் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஹைதி அதிபர் ஜோவனல் மோயிஸ் படுகொலை செய்யப்பட்டார். எனவே, புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை கடந்த பிப்ரவரி மாதத்திற்குள் நடத்த வேண்டும். ஆனால், […]

ஹைதி நாட்டின் பிரதமர் ஏரியல் ஹென்றி தனது பதவியிலிருந்து விலகி உள்ளார். அவரை தொடர்ந்து இடைக்கால பிரதமராக அந்நாட்டின் நிதி மற்றும் பொருளாதாரத் துறை அமைச்சர் மைக்கேல் பேட்ரிக் போயிஸ்வேர்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹைதி நாட்டில் ஆயுதக் குழுவினர் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஹைதி அதிபர் ஜோவனல் மோயிஸ் படுகொலை செய்யப்பட்டார். எனவே, புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை கடந்த பிப்ரவரி மாதத்திற்குள் நடத்த வேண்டும். ஆனால், பிரதமர் ஏரியல் ஹென்றி தலைமையிலான அரசு இதை செய்ய தவறியதால், பதற்றம் அதிகரித்தது. சர்வதேச அளவில் அவருக்கு அழுத்தம் கூடியது. உள்நாட்டில் ஆயுதக்குழுக்களின் தாக்குதல்களும் தொடர்ந்து அரங்கேறி வந்தன. இதனால், கடந்த மாதம் ஏரியல் ஹென்றி பதவி விலகுவதாக அறிவித்தார். அதன்படி, இடைக்கால கவுன்சில் உருவாக்கப்பட்ட பிறகு, நேற்று பதவியில் இருந்து விலகி உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu