உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எச் ஏ எல் விமான கருப்பு பெட்டிகளுக்கு டிஜிசிஏ ஒப்புதல்

February 16, 2023

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம், விமானங்களுக்கான கருப்பு பெட்டியை உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது. இந்நிலையில், நிறுவனம் தயாரித்துள்ள காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் மற்றும் பிளைட் டேட்டா ரெக்கார்டர் ஆகிய கருவிகளுக்கு இன்று இந்திய தொழில்நுட்பத்துறை தர ஒழுங்காற்று அமைப்பு - ஐடிஎஸ்ஓ ஒப்புதல் அளித்துள்ளது. விமானப் போக்குவரத்து ஒழுங்காற்று அமைப்பான டிஜிசிஏ இந்த ஒப்புதலை உறுதி செய்துள்ளது. எச்ஏஎல் நிறுவனம் தயாரித்துள்ள சிவிஆர் மற்றும் எப்டிஆர் கருவிகளின் மூலம், விமானத்தின் முக்கிய தரவுகள் கிடைக்கப்பெறும். குறிப்பாக, விமான விபத்து […]

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம், விமானங்களுக்கான கருப்பு பெட்டியை உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது. இந்நிலையில், நிறுவனம் தயாரித்துள்ள காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் மற்றும் பிளைட் டேட்டா ரெக்கார்டர் ஆகிய கருவிகளுக்கு இன்று இந்திய தொழில்நுட்பத்துறை தர ஒழுங்காற்று அமைப்பு - ஐடிஎஸ்ஓ ஒப்புதல் அளித்துள்ளது. விமானப் போக்குவரத்து ஒழுங்காற்று அமைப்பான டிஜிசிஏ இந்த ஒப்புதலை உறுதி செய்துள்ளது.

எச்ஏஎல் நிறுவனம் தயாரித்துள்ள சிவிஆர் மற்றும் எப்டிஆர் கருவிகளின் மூலம், விமானத்தின் முக்கிய தரவுகள் கிடைக்கப்பெறும். குறிப்பாக, விமான விபத்து நேரும் பொழுது, விமானத்திற்குள் இருக்கும் ஒலி அமைப்பு சூழல் சார்ந்த தகவல்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான விபத்துகளின் போது, கருப்பு பெட்டியில் உள்ள ஆதாரங்களைக் கொண்டே முக்கிய விசாரணைகள் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu