அயோத்தியில் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் கோவில் அறக்கட்டளை மூலம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து முக்கிய தலைவர்கள், பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. மேலும் 55 நாடுகளில் இருந்து 100 உயர் அதிகாரிகள் விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். சில மாநிலங்களில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளனர். தற்போது ஜனவரி 22 ஆம் தேதி நாடு முழுவதும் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் மதியம் 2:30 மணி வரை விடுமுறை அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.