மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு ஐந்தாம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வினை 557 நகரங்களில் உள்ள 24 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். மேலும் தேர்வு எழுதும் மாணவர்கள் எந்தெந்த நகரங்களில் தேர்வு மையக் கூடங்கள் அமைந்துள்ளது என்பது குறித்த விவரம் கடந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட்டது. தற்போது தேர்விற்கான நுழைவுச் சீட்டு மூன்று நாட்கள் முன்னதாக இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இதனை https://exams.nta.ac.in/NEET என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவம் மற்றும் பிறந்த எண் கொண்டு இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.














