ஹமாஸ் ஆயுத குழுவின் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஈரானில் ஹமாஸ் ஆயுத குழுவின் தலைவராக செயல்பட்டு வந்த இஸ்மாயில் ஹனியே என்பவர் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அவரது வீட்டில் இந்த படுகொலை நடந்தது. அவருடன் அவருடைய உதவியாளரும் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. காசா போரில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலியாகி உள்ளனர். ஹமாஸ் முற்றிலுமாக அழிக்கப்படும் என்றும் அதன் தலைவர்கள் அனைவரும் கொல்லப்படுவர் என்று இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இந்த சம்பவம் உலக அளவில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடைபெறும் போர் சுற்றியுள்ள நாடுகளுக்கும் விரிவடையும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது.