தீவுத்திடலில் கைவினை பொருட்கள் கண்காட்சி, உணவுத் திருவிழா

April 29, 2023

தீவுத்திடலில் கைவினை பொருட்கள் கண்காட்சி, உணவுத் திருவிழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக சுற்றுலாத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சென்னை தீவுத்திடலில் மே 14-ம் தேதி வரை நடைபெறும் “சென்னை விழா-2023”ஐ விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து இந்நிகழ்வில், நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான சர்வதேச கைத்தறி துணிகள் மற்றும் பாரம்பரிய கைவினை பொருட்களுக்கான கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழாவுக்கான அரங்குகளை திறந்து வைத்து […]

தீவுத்திடலில் கைவினை பொருட்கள் கண்காட்சி, உணவுத் திருவிழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழக சுற்றுலாத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சென்னை தீவுத்திடலில் மே 14-ம் தேதி வரை நடைபெறும் “சென்னை விழா-2023”ஐ விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து இந்நிகழ்வில், நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான சர்வதேச கைத்தறி துணிகள் மற்றும் பாரம்பரிய கைவினை பொருட்களுக்கான கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழாவுக்கான அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார். இவ்விழா ரூ.1.50 கோடியில் பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. கண்காட்சியில் 10 வெளிநாடுகளை சேர்ந்த கைவினை கலைஞர்கள் தங்களது நாட்டு பொருட்களை 30 அரங்குகளில் கண்ணை கவரும் வகையில் காட்சிபடுத்தியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu