இலங்கையின் புதிய விளையாட்டு துறை அமைச்சர் ஆகிறார் ஹரின் பெர்னான்டோ.
இலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்க நேற்று இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கேவை பதவி நீக்கம் செய்தார். முன்னதாக உலக கோப்பையில் மோசமான தோல்வியை சந்தித்ததற்காக இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகளை நீக்கம் செய்து ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்தார் விளையாட்டு துறை அமைச்சர் ரோஷன். இதனைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் விவகாரத்தில் அந்நாட்டு அரசு தலையீட்டை ஐசிசி எதிர்த்து ஐசிசி உறுப்பினர் பதவியில் இருந்து இலங்கை கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. அப்போது பேசிய ரோஷன், கிரிக்கெட்டை சுத்தம் செய்யும் முயற்சியில் நான் கொல்லப்படலாம். அப்படி நான் கொலை செய்யப்பட்டால் அதிபரும், அதிபரின் ஆலோசகரும் காரணம் என்று தெரிவித்தார். இந்நிலையில் அமைச்சரவை கூட்டம் முடிந்த சில நிமிடங்களில் அமைச்சர் பதிவில் இருந்து ரோஷனை அதிபர் ரணில் நீக்கினார். தற்போது புதிய விளையாட்டு துறை அமைச்சராக ஹரின் பெர்னான்டோ செயல்பட உள்ளார்.