ஹர்ஷா என்ஜினீயர்ஸ் - பொது பங்கீட்டில் 74.7 மடங்கு முதலீடுகளை குவித்துள்ளது

September 19, 2022

இந்தியாவில், தற்பொழுது, பிரபல நிறுவனங்களின் பொது பங்கீடுகளில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற ஹர்ஷா இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் பொது பங்கீட்டில், நிறுவனத்தின் பங்குகளில், 74.7% கூடுதலாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஹர்ஷா இன்ஜினியர்ஸ் நிறுவனம், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு, பியரிங் (precision bearing cages) போன்ற கருவிகளை உற்பத்தி செய்து தருகிறது. இந்த நிறுவனம், பொது பங்கீட்டின் மூலம், சுமார் 755 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவெடுத்து இருந்தது. முதல் கட்ட […]

இந்தியாவில், தற்பொழுது, பிரபல நிறுவனங்களின் பொது பங்கீடுகளில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற ஹர்ஷா இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் பொது பங்கீட்டில், நிறுவனத்தின் பங்குகளில், 74.7% கூடுதலாக முதலீடு செய்யப்பட்டுள்ளது.

ஹர்ஷா இன்ஜினியர்ஸ் நிறுவனம், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு, பியரிங் (precision bearing cages) போன்ற கருவிகளை உற்பத்தி செய்து தருகிறது. இந்த நிறுவனம், பொது பங்கீட்டின் மூலம், சுமார் 755 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவெடுத்து இருந்தது. முதல் கட்ட பொதுப்பங்கீட்டில், 455 கோடி ரூபாயும், புரோமொட்டர்களுக்கான பங்கு விற்பனையில் 300 கோடி ரூபாயும் நிதி திரட்டப்படுவதாக இருந்தது. ஒரு பங்கின் விலை 318 ரூபாயிலிருந்து 330 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிதியின் ஒரு பகுதி நிறுவனத்தின் கடனை அடைப்பதற்கு செலவிடப்படும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும், நிறுவனத்திற்கான புதிய கட்டமைப்புகள் அமைப்பதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொதுப் பங்கீட்டின் முதல் நாளிலேயே பொதுமக்களிடம் இருந்து கூடுதல் முதலீடுகள் குவிந்தன. இறுதி நாளில், 74.7 மடங்கு பொது பங்குகள் விற்பனையாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளில், 17.63 மடங்கு கூடுதல் முதலீடுகள் குவிந்துள்ளதாகக் கூறப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu