உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் வேந்தர் கிளாடின் கே பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
யூத எதிர்ப்பு மற்றும் பிறர் கருத்துக்களை பயன்படுத்தியது போன்ற சர்ச்சைகளில் கிளாடின் கே சிக்கியிருந்தார். இதன் காரணமாக, அவருக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது. இவற்றின் விளைவாக பதவி விலகுவதாக கிளாடின் கே அறிவித்துள்ளார். இந்த நிலையில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் இடைக்கால வேந்தராக ஆலன் எம். கார்பர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 12 ஆண்டுகளாக ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பணி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடர்பாக, அண்மையில் தனது வருத்தத்தை அவர் பதிவு செய்திருந்தது கவனம் பெற்றது.