ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்கள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
ஜனநாயக ஜனதா கட்சி மற்றும் பாஜக இடையிலான கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படாத நிலையில் பிளவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, மனோகர் லால் கட்டார் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளார். எனவே, தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஹரியானா மாநில ஆளுநரிடம் இன்று ராஜினாமா கடிதத்தை அவர்கள் ஒப்படைத்தனர். இந்த நிலையில், சுயேச்சைகளின் ஆதரவு பெற்று ஹரியானாவில் பாஜக ஆட்சியைப் பிடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், வரும் அக்டோபர் மாதத்தில் ஹரியானா மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது கவனிக்கத்தக்கது.