ஹரியானாவில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்தது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். 116 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹரியானாவில் உள்ள விஷ்வ இந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற யாத்திரையில் இரு தரப்பினர் கிடையே வன்முறை வெடித்தது. இதில் பல வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. துப்பாக்கி சூடு, கல் வீச்சு போன்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதில் ஒரு கும்பல் மசூதி மீது தாக்குதல் ஏற்படுத்தியதில் மதகுரு ஒருவர் உயிரிழந்தார். இதனை அடுத்து அங்குள்ள சில மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மாநில போலீசாருடன் மத்திய பாதுகாப்பு படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
ஹரியானாவின் வன்முறை கலவரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த வன்முறையில் ஈடுபட்டதற்காக 90 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார். சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து இந்த குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெறும் எனவும்,மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எங்களின் பொறுப்பு எனவும் கூறியுள்ளார். மேலும் இழப்பு ஏற்பட்டவர்களுக்கு நிச்சயம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.