இலங்கை அணியின் ஜிம்பாபவே தொடருக்கான ஒரு நாள் போட்டிகளுக்கு குஷால் மெண்டாஸ் கேப்டன் ஆகவும், டி20 போட்டிகளுக்கு வனிந்து ஹசரங்கா கேப்டன் ஆகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
ஜிம்பாப்வே அணி இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு ஜனவரி 2024, 8ம் தேதி 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஜிம்பாப்வே அணி விளையாட இருக்கிறது.இந்நிலையில் ஜிம்பாப்வே தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு நாள் போட்டிகளுக்கு குஷால் மெண்டோஸ் கேப்டன் ஆகவும், சரிதா அசலங்கா துணைக் கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று டி20 அணியில் வனிந்து ஹசரங்கா கேப்டன் ஆகவும், சரிதா அசலங்கா துணை கேப்டன் ஆகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.