டிஸ்னி ஹாட்ஸ்டார் - ல் இருந்து வெளியேறும் எச்பிஓ

March 9, 2023

வரும் மார்ச் 31ஆம் தேதி முதல், எச்பிஓ தளத்தின் அனைத்து ஒளிபரப்புகளும் நிறுத்தப்படும் என்று டிஸ்னி ஹாட்ஸ்டார் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதே வேளையில், 10 க்கும் மேற்பட்ட மொழிகளில், டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் குழுமத்தின் அனைத்து ஒளிபரப்புகளும் தொடர்ந்து செயல்படும் என தெரிவித்துள்ளது. டிஸ்னி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாப் இகர், நிறுவனத்தில் செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. […]

வரும் மார்ச் 31ஆம் தேதி முதல், எச்பிஓ தளத்தின் அனைத்து ஒளிபரப்புகளும் நிறுத்தப்படும் என்று டிஸ்னி ஹாட்ஸ்டார் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதே வேளையில், 10 க்கும் மேற்பட்ட மொழிகளில், டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் குழுமத்தின் அனைத்து ஒளிபரப்புகளும் தொடர்ந்து செயல்படும் என தெரிவித்துள்ளது. டிஸ்னி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாப் இகர், நிறுவனத்தில் செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பு காரணமாக, எச்பிஓ தளத்தின் நேயர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தின் சந்தா கட்டணம் எச்பிஓ ஒளிபரப்புகளுக்கும் சேர்த்தே வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், எச்பிஓ ஒளிபரப்புகள் நிறுத்தப்படுவதால், சந்தாதாரர்கள் தங்கள் சந்தா கட்டணத்தை திருப்பி செலுத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர். மேலும் சிலர், டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்திற்கான சந்தா கட்டணத்தை குறைத்து அறிவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu