குஜராத் பாலம் விபத்தில் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

February 22, 2023

குஜராத் பாலம் விபத்தில் இழப்பீடு வழங்க அஜந்தா குழுமத்திற்கு குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத்தின் மோர்பியில் உள்ள மச்சூ நதி மீது கட்டப்பட்டிருந்த பழமையான தொங்கு பாலம் கடந்த அக்டோபர் 30-ந்தேதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் 135 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த விபத்து தொடர்பாக குஜராத் ஐகோர்ட்டு தாமாக வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் தொங்கு பாலம் விபத்து […]

குஜராத் பாலம் விபத்தில் இழப்பீடு வழங்க அஜந்தா குழுமத்திற்கு குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தின் மோர்பியில் உள்ள மச்சூ நதி மீது கட்டப்பட்டிருந்த பழமையான தொங்கு பாலம் கடந்த அக்டோபர் 30-ந்தேதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் 135 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த விபத்து தொடர்பாக குஜராத் ஐகோர்ட்டு தாமாக வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில் தொங்கு பாலம் விபத்து வழக்கு தொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையின்போது பால விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கவும் அஜந்தா குழுமத்திற்கு குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu