வோடபோன் ஐடியா நிறுவனத்துக்கு 1128 கோடி மதிப்பிலான வரி பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும் என மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமான வரித்துறை இந்த தொகையை திருப்பி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 -2017 ஆம் நிதியாண்டில், வோடபோன் ஐடியா நிறுவனம் அதிகமான வரிகள் கட்டியதாக வழக்கு தொடர்ந்திருந்தது. இதனை விசாரித்து வந்த மும்பை உயர் நீதிமன்றம், இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகள் உரிய நேரத்தில் வோடபோன் ஐடியா செலுத்திய வரிகளை பரிசீலிக்கவில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விரிவான விசாரணை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. 30 நாட்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.